பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகமுறுதல் – நீதி வெண்பா 5

நேரிசை வெண்பா

பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல் - தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்(து) அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில். 5

- நீதி வெண்பா

பொருளுரை:

நல்ல நாக்கானது பகைமையைச் சேர்த்தே தரும் முப்பத்ரெண்டு பற்களையும் துணையாகக் கொண்டே பலவகை சுவைகளையுடைய உணவை உண்ணுந் தன்மை போல,

நற்குணமுடையோர், செய்யும் செயலால் மிகுந்த துன்பத்தைச் சேர்த்தளிக்கும் பகைவரிடத்திலும் உண்மையான அன்பு கொண்டு அவர்களால் இன்பம் அடைவார்கள் என்பதாகும்..

கருத்து:

நல்லோர்கள் பகைவர்களிடத்தும் அன்பு பாராட்டி அவர்களிடம் நன்மையடைந்து சுகம் பெறுவார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-24, 7:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே