நறுந்தொகை 33
குறள்வெண் செந்துறை
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
பொருளுரை:
நூறு வருடம் பழகினாலும் கீழ் மக்களுடைய நட்பானது நீரிலுள்ள பாசியைப் போல வேரூன்றாது.
எத்தனை காலம் பழகினாலும் கீழ்மக்களுடைய நட்பு நீர்ப்பாசி வேரூன்றாமைபோல வேரூன்றாது.