நன்மதி வெண்பா - நூல் - பாடல் 30
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
சாந்த குணங்கணக்கற் சார்ந்தாலும் வன்றந்தப்
பாந்தள்தீண் டாதேனும் பல்புகர்மா – வா’ய்’ந்தகடாம்
விட்டாலும் தேள்கொட்டா விட்டாலு நன்மதியே
கிட்டார்கள் மேதினியோர் கேள்! 30