நன்மதி வெண்பா - நூல் - பாடல் 31
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
மேலியல்தே ரும்பருவ மேவுமுன மக்கட்குப்
பாலியவி வாகமதைப் பாலிப்பர் - காலமுற்று
முற்றாத காய்துவர்ப்பு மொய்க்குமன்றித் தீஞ்சுவையைப்
பற்றாது நன்மதியே பார்! 31