காவலில் நிற்பான் கரியானைக் காவினன்
காவலில் நிற்பான் கரியானைக் காவினன்
காவிரிப் பூம்புனல் சூழ்ந்திடும் நம்மிறைவன்
தேவி அகிலாண்டாள் தன்னுடன் சேர்ந்தருள்வான்
கோவிலை நீயுய்யத் தேடு
கவிக்குறிப்பு : திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்கா
ஆலயப் பாடல்
இங்குள்ள சிவலிங்கத்தை அப்பு லிங்கம் என்பர் . அப்பு என்றால் நீர் என்று பொருள்
லிங்கத்தைச் சுற்றி நீர் எப்பொழுதும் பெருகி வந்துகொண்டே இருக்கும்