துடிப்பதென்ன

துடிப்பதென்ன?
15 / 03 / 2024
வீணையின் நரம்புகள் முறிந்ததென்ன?
வேதனை வாழ்வினில் நிறைந்ததென்ன?
போதனை யாவரும் சொல்வதென்ன?
சோதனை பாதையை மறைப்பதென்ன?

கூடாத வார்த்தைகள் சொன்னதென்ன?
தேடாத சோகங்கள் சூழ்ந்ததென்ன?
பாடாத ராகங்கள் கேட்பதென்ன?
ஆடாத நாட்டியங்கள் ஆடுவதென்ன?

சிரித்த உன்பூமுகம் மறைந்ததென்ன?
சிதறிய என்வாழ்வு தொலைந்ததென்ன?
பதறியே நானென்னை மறந்ததென்ன?
கதறியே நான் தினம் அழுததென்ன?

முற்றிய பயிர்தலை சாய்த்ததென்ன?
பற்றிய கால்கள் நடை தளர்ந்ததென்ன?
தேற்றிய கைகள் ஓங்கி அடித்ததென்ன?
வற்றியே கண்களும் காய்ந்ததென்ன?

என்ன என்னவென்று கேள்விகள் துளைப்பதென்ன?
எண்ணமெல்லாம் உன்நினைவு நிறைந்ததென்ன?
உண்ணாமல் உறங்காமல் தவிப்பதென்ன?
உனக்கான என் உயிரும் துடிப்பதென்ன?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Mar-24, 6:32 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 119

மேலே