தனிமையில் ஒருநாள்
தனிமையில் ஒருநாள்.
வாட்ஸ் ஆப்பை திறந்தேன்
என் இதயத்தை உனக்கு
அனுப்புவதற்கு
ஏனோ என் மனம் மாறியது
போட்டோ ஷாப்பைத் திறந்து
உன்னை வரைய நினைத்தேன்
"ஒரு படம் கோடானு கோடி
வார்த்தைகளுக்கு சமம்"
நான் உன்னை வரைந்தேன்
அது உண்மையில் நீ அல்ல! "ஒரு வகையான நீ"
பூக்கள் மற்றும் நட்சத்திரங்களை வரைந்தேன்
பூக்களின் வாசனை போல
என் வாழ்வில் வீசும் இனிமையான வசந்தம் நீ
வானில் ஒளிரும்
துருவ நட்சத்திரம் போல்
என் வாழ்வுக்கு வழிகாட்ட
வந்தவள் நீ
என்னை மன்னித்து விடு
நான் வரைந்த ஓவியத்தை
உனக்கு அனுப்ப முடியாது
அது (நீ) இப்போது
எனக்கு சொந்தம்
ஆக்கம்
சண்டியூர் பாலன்.