காதலியைக் கண்ட நிலை

அழகினைக் காணும்பொழுது கண்கள், நிலையறியாது சொக்கியே நிற்கின்றன

தவறவிட்ட தருணங்கள், நெஞ்சாங்கூட்டில்
தவறிய பின்பே தடவிநிற்கின்றன.

நிகழ்கால நிகழ்வுகள், நிலைமுடிந்த
நிலையிலேயே நினைவுக்குள் பூக்கின்றன.

மனது மத்தளம் கொட்டிநிற்கையில்,
அறிவு மறத்தநிலையே கொண்டிருக்கின்றன.

புலன்களனைத்தும் பூத்த பூமுகம் கண்டதும்
செய்வதறியாது திகைத்தே கிடக்கின்றன.

அத்தனை மலர்களும் கொட்டிக்கிடக்கும்
தடாகமே, தயங்கித் தலை கவிழ்ந்தவனுக்கு

தனிவழியுரைத்து தலைகோதி
முத்தமுமிழ்ந்து மயங்கச் செய்யமாட்டாயோ?

எழுதியவர் : thee (18-Oct-11, 2:13 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 222

சிறந்த கவிதைகள்

மேலே