தனிமை…தனிமை…
தனிமை…தனிமை…!
அழுகையின் கண்ணீர்
முத்துக்கள் கண்ணில்
கோர்க்கும் முன்னே
ஆதரவாய் தாங்கி
நின்ற அப்பா
நீலி கண்ணீர்
காரியத்தை சாதிக்க
கோபமாய் சொன்னாலும்
விட்டு கொடுக்காத
அம்மா
முடிச்சிட்ட நாளில்
இருந்து
தாங்கி பிடித்த
கணவன்
கானல் நீராய்
கண் முன்
மூவரும் தெரிய
தனக்கு தானே
அவர்களுடன் பேசியபடி
தனிமையில் அமர்ந்திருந்தாள்
அந்த மூதாட்டி
ஏன் என்று
கேட்க ஆளில்லாமல்