பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்து மனித வளர்ச்சிப் பாதையில் முன்னேறிடு

பெண் உரிமை பாரதியார் முழங்கியது
இன்றோ, முழக்கம் சற்றே முடங்கியது
பெண்களுக்கு சமஉரிமை பேச்சளவில்
ஆண்களுக்கே முதலிடம் செயலளவில்

விஞ்ஞானம் பொருளாதாரம் ஓங்கியது
பெண்கள் வளர்ச்சியோ பின் தங்கியது
கரோனா போர்கள் விலைவாசி உயர்வு
இதனால் பெண்வர்கம் கண்டது தாழ்வு!

உலகில் பெண்களுக்கே என்றும் பாதிப்பு
ஆணரக்கர்களால் பெண் பலர் கற்பழிப்பு
நிறைவேறிய சட்டங்கள் மீறப்படுகின்றன
மனிதநேயம், சகோதரத்துவம் சாகின்றன!

ஒரு பெண் விண்ணில் மிதப்பதோ அல்லது
பத்து பெண் விமானஓட்டியாய் பறப்பதோ
நூறு பெண்கள் தரைப்படையில் சிறப்பதோ
பெண்களுக்கு உரிய உயர்வை கொடுக்காது!

கருவில் வளரும் பெண்ணை பாதுகாத்து
பிறக்கும் பெண்களை மனிதராய் மதித்து
அவர்கட்கு போதிய உணவு கல்வியளித்து
குடும்ப நலத்தில் பெண்ணை ஊக்குவித்து!

பெண் பாலியல் வன்முறையை தவிர்த்து
எல்லா தொழிலிலும் உரிய வாய்ப்பளித்து
பெண் தாய் மட்டுமல்ல சகோ தோழி கூட
இவ்வுண்மை உணர்ந்து வாழ்ந்திடுவோம்!

உலக பெண்கள் தினம் (08 .03 .2024 )

உலகில் சக்தி இல்லையெனில் சிவமில்லை
சிவமின்றி சக்தியில்லை எனும் உயர்கூற்று
மெய்யாகும்போது சமஉரிமை கொடியேற்று
அந்நாளில் சுரக்கும் அன்பென்ற இறைஊற்று!

இன்று உலக பெண்கள் தினம் அன்று
உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும்
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கனவு பலிக்கட்டும்!
என் கனவு ஜெயிக்கட்டும்!

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Mar-24, 4:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 35

மேலே