காதல் தீபம்

உன் கண் அசைவில், அழகில்
என்னை ஒரு நொடியில் நிலைகுலையைச் செய்தாய்
இப்போது கண்மூடி மௌனமாய் இருக்கின்றாய்
புயலில் அகப்பட்ட படகுபோல்
செய்வதறியாது ஊசலாடும் என்மனம்
கண் திறப்பாய் என்பாவை விளக்கே
மௌனம் கலைந்து பேசுவாய்
'கரை சேர' எனக்கு வழிகாட்டுவாய்
கலங்கரை விளக்கம் போல் காதல் தீபமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Mar-24, 3:21 pm)
Tanglish : kaadhal theebam
பார்வை : 57

மேலே