புதிய மார்க்கம்

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

*புதிய மார்க்கம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

"கால்நடையாக
பழனிக்கும்
காசிக்கும்" போனாலும்
கடவுளை
அடைய முடியாது.....
ஏனெனில் ?
ஆன்மிகப்
பயணம் என்பது
"வெளிநோக்கிய"
பயணம் அல்ல
"உள்நோக்கிய பயணம்..... !"

கடவுள்
உன் மனதுக்குள்
இருக்கிறார்....
ஆம் ...!
"பிரபஞ்சத்தை" விட
பெரியது என்பதால்....
உன் மனதுக்கும்
உனக்கும் இருக்கின்ற
இடைவெளி
மிக அதிகமானதாகும்....
நீ உள்நோக்கி
பயணத்தை
அவ்வளவு எளிதில்
செய்து விட முடியாது ......

உள்நோக்கிய பயணம்
செய்வதற்கான
பாதை.......
அன்பு கருணை
கர்மா தர்மம்
இவற்றின் மூலம்
போடப்பட வேண்டும் நீ...!

"நீரால் உன் உடலை
சுத்தம் செய்கிறாய்.... "
பாவத்தால்
"உன் ஆன்மாவை
அசுத்தம் செய்கிறாய்... "

கைகளால்
ஆண்டவனை வணங்குகிறாய்...
உன் செயல்களால்
ஆண்டவன் கோட்பாடுகளை
அலட்சியம் செய்கிறாய்....

ஆண்டவனிடம்
எதையெதையோ
கேட்டிருக்கிறாய்.....
"என்றைக்காவது
கேட்டிருக்கிறாயா?
அந்த ஆண்டவனையே....!"

கோவில் என்பது
ஆன்மீகத்திற்கு
இதயம் போன்றது....
"இருப்பினும்
அதுவே
ஒரு ஜீவனாகி விடாது...!"

இங்கும்
ஒரு உண்டியல் இருக்கிறது
அதில்
போட வேண்டியது....
உன்னிடமுள்ள
நான் என்ற அகந்தை
ஜாதி மத வேறுபாடு
சுயநலம்
கோபம் பொறாமை இவற்றையெல்லாம்
அதில் போட வேண்டும்....

இங்கும்
அணிய வேண்டியவை
இருக்கிறது....
மத உடைகள் அல்ல
மனிதத்தை....
மதக்குறியீடுகளை அல்ல
"மனிதனுக்கான
குறியீடுகளை......!"

இங்கும்
துறக்க வேண்டியது இருக்கிறது
குடும்பத்தை அல்ல
குறுக்கு வழியை....
பொன் பொருளை அல்ல
போலி முகத்தை.....
ஆசையை அல்ல
அளவுக்கு மீறிய தேவையை....

தெய்வத்தை தேடி
செல்வது வீண் வேலை...
"தெய்வம்
மனதுக்குள்ளேயே
இருக்கிறது.... !"

இறைவன்
நீராய் இருக்கிறான்....
நீ பள்ளமாக இருந்தாலே
நிறைந்து விடுவான்..... !

இறைவன்
காற்றாக இருக்கிறான்....
நீ கதவு ஜன்னலை
திறந்து வைத்தாலே
உள்ளே வந்துவிடுவான்..... !

இறைவன்
தீயாக இருக்கிறான்.....
நீ விளக்காக இருந்தாலே
தீபமாக
சேர்ந்து விடுவான்.....!

அவன் முன்னால்
"நிர்வாணமாக"
நிற்க வேண்டியது இல்லை....
"நிர்மூலமாக"
நின்றாலே போதும்
"உன்னிலிருந்து வெளிப்படுவான்....."

இறைவன்
குழந்தை மாதிரி
"அன்புக்குத்" தான்
அடிமையாவான்
"அதிகாரத்திற்கு" அல்ல.....

*கவிதை ரசிகன்*


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Apr-24, 9:18 pm)
Tanglish : puthiya MAARKKAM
பார்வை : 27

மேலே