வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
+++++++++++++++++++
பணத்துக்கே திரிந்தோம் பக்தியை மறந்தோம்/
பாரம்பரிய உணவுகளை அறவே மறந்தோம்/
நவதானியம் மறந்து நோய்களுக்கு விருந்தாகி/
நலமே இல்லாமல் நாளும் கடக்கிறோம்/
ஊக்கத்தால் விரட்டிட வேண்டிய கொரோனாவை /
ஊரடங்கு அரசு உத்தரவால் விரட்டினோம்/
வலிமையின்றி இருக்கிறோம் கிருமிகளுக்கு அஞ்சுகிறோம்/
வலிமை தாராயோ வரலட்சுமி தாயே/
அகிலத்தைக் காப்பவளே அரக்கனை வென்றவலே/
அருள்தனை தந்திடுவாய் நோய்களை வெல்லவே/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்