மனம்
நிழல் குடை ஒன்று
நிழலாய் நீண்டு இருக்க
நிழல் இல்லா உருவங்களை
எண்ணி நிலை தடுமாறி
நிற்பதேனோ
நிழல் தரும் ஆறுதலை
ஏற்கா நிஜங்களை எண்ணி
யோசித்து கொண்டிருப்பது
ஏனோ
தடைகள் போட்டு பல திட்டுகளை
போட்டு மதிசுவர் எழுப்பவது ஏனோ
உனதென்ற ஒன்றை பலருக்கு
பகிர பல உறவுகள் சேரும்
உணராத மனம் ஏனோ
உறவுகள் வலுக்க விட்டு கொடு
உனக்கென்ற ஒன்று பல உறவுகளை
ஏக்க வழி விடு..
மனமே மாறி விடு....