மலரும் மாலையும்

மலரும் மாலையும்

மலரும் மாலையும்
விடியும் காலையும்/
காலையும் கலையும்
கன்னியே உன்முகமே/

உன்முகமே கண்டேன்
உயிரினில் கலந்தேன்/
கலந்தேன் உன்னிலும்
கனவாக தொலைத்தேன்/

தொலைத்தேன் காதலை
தோற்றமில்லா சாதியால் /
சாதியால் இயன்றாது
சாதித்தலில் இயலவில்லை/

இயலவில்லை ஒன்றினைய
இணைந்திடுவே உணர்ந்திடுவோம்/
உணர்ந்திடுவோம் தமிழரென
உலகைவெல்ல புறப்படுவோம்/

புறப்படுவோம் தமிழுக்கு
பார்யெங்கும் சிலைவைக்க/
சிலைவைத்தே சூட்டிடுவோம்
மலரும் மாலையும்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:00 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : malarum maalaium
பார்வை : 56

மேலே