மனம்தொடுவாள் புன்னகைப் பூவால்

தினம்குயில் கூவினால் தென்றல் வசந்தம்
வனமெலாம் பூக்கள் மகிழ்ச்சியில் ஆடும்
இனிய இவளும் இதழ்விரித்து வந்து
மனம்தொடுவாள் புன்னகைப்பூ வால்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எதுகை ---தின வன இனி மன

மோனை 1 3 ல் ---தி தெ வ ம இ இ ம வா

புன்னகைப் பூவால் --- புன்னகைப்பூ வால் ----வகையுளி

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-24, 7:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே