கண்ணனின் காதலி

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

காதலின் தேவி கவிதைகள் பாடி
கனவுகள் வழியே கலைநயம் தேடி
அன்னம் என்றே சொல்லும் நடையில்
கன்னல் மொழிகள் காற்றினில் ஆட

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

முத்தங்கள் என்றே பூமழை சிந்த
சத்தங்கள் கொண்டே சங்கீதம் முந்த
மயங்கும் மாலை மந்திர வேளையில்
இயங்கும் மனங்கள் இன்னிசை பாட

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

கூடிய பொழுதில் குறிஞ்சியும் மலர
வாடிய பொழுதில் நெருங்சிமுள் இடற
தேடிய கண்களில் கலக்கம் தொடர
நாடிய நாயகன் நினைவை சுமந்து

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

வெண்பா வில்தானே ஒருகாதல் கீதம்
கண்பார்த்த நொடியில் கனிந்தது ராகம்
பெண்பா வைநெஞ்சில் புரியாத சோகம்
கண்ணீர் பெருக்கும் யாகத்தின் முடிவில்

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

உற்றெ டுத்தோடும் உன்னத கவிதை
காற்றெ டுத்தோடும் தந்திரம் கண்டு
ஏற்றிய தணலாய் மலர்மேனி வாட
சேற்றுத் தாமரை கதிர்முகம் தேட

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

மணவாழ்வு காண மனம்வேண்டி நின்றாள்
புணர்ஜென்ம பந்தம் நிதம்வேண்டு கின்றாள்
கணந்தோறும் கரையும் கற்பனை என்றே
வினையான வாழ்வை விலையாக வைத்து

கண்ணன் நெஞ்சில் கலந்தாள் கோதை
கண்கள் கொஞ்சும் காவிய போதை

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (16-Apr-24, 5:43 pm)
Tanglish : kannanin kathali
பார்வை : 114

மேலே