உயிரினை உரசாதே

சிரித்த தேனடி சீதள மேமனம்
சிக்கிக் கொளவலை தந்தொரு வம்பொடு
சிறகென இமையுள விழிவழி உயிரினை உரசாதே
*
சிலிர்க்க வேவிடு தேயிரு பூவிழி
சித்தத் துறைநிறை யன்புற வென்றுயிர்
சிசுவென வழுவதை யொருநொடி ஒருதர மறிவாயா
*
எரிக்கு மாவியை யேவிழி யோடிமை
இட்டத் தொடுவுயிர் தந்துய ரன்பொடு
இருதய வறைகளி லிடுகிற வரையமை தியுமேதோ?
*
இழுத்து மூடிய தேனடி யேமனம்
இக்கட் டுறுவதி லின்சுவை யென்பது
இளகிய மனமுன திலையென எழுதிட வழிதானோ?
*
சிரிக்கி யேஒரு சேதியை நீசொலு
சித்தத் தொடுவுன தன்பெனு முன்பனி
சிதறிட வழிவிடு சிறுநகை மழைவர வரமேதா
*
சிலுப்பி யேசெலு வாயதி லேஉயிர்
சிக்கிக் கொளுதடி நெஞ்செனு மண்புழு
சிதைவுறு நிலைகொளு மொருதுய ருனதழ கதனாலே!
*
நரிக்கு மேலுள தாயொரு நாடக
நட்சத் திரமுன தம்புவி டும்கய(ல்)
நடிகையர் திலகமு மயலுறு வகையடி இளமானே
*
நடிப்பு மேனடி நாயகி யாகிட
நெற்றித் திலகமி டும்கதை என்பது
நழுவிடு கிறநிலை தருகிற வலியது தகுமோடீ!
*
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Apr-24, 1:41 am)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே