உசிரே என்னை நீங்காதடி

உசிரே என்னை நீங்காதடி
👫👫👫👫👫👫👫👫👫👫

ஏழையெனை நோக்கி
ஏறெடுத்தப் பார்வையில்/
மழைத்துளி விழுந்த
மணலாகப் புதுப்பொலிவானனே/

கரைசேராக் கடலலையாக
கனவில் வருபவளே/
கரைகின்ற நிலவாக
கலையிழந்தேன் நினைவாலே/

வலையிட்ட மீனாக
நிலையற்று மயங்கி/
ஆலையிட்ட கரும்பாக
பாலை நிலமாகியே/

கடிகார முள்ளாக
கடக்காது நிற்கிறேன்/
கடத்தும் மின்கலமாக
கன்னியே என்னிடமேவா/

சூழ்நிலை மாறினும்
சூரியனை சுற்றமறவா/
பூமியாக உசிரே
என்னை நீங்காதடி/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (16-Apr-24, 2:42 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 51

மேலே