விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 பாகம் 13

விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 : பாகம் 13
++++++++++++++++++++++++++++++++++
கவிதாவின் குரலை போன்வழிக் கேட்டிட
கதிரவனைக் கண்டிட காத்திருக்கும் தாமரையாக
காத்திருப்பேன் ஞாயறன்று STD பூத்திலே..

ஒயின் ஷாப்பின் வலப்புறத்திலே
STD பூத்
ஞாயறன்டு பூத்தை திறந்தவுடன்
பூத்துக்காரர் பாய் உங்க மாமி
போன் செய்யுமா ?யென
அவரும் ஞாபகப் படுத்த

வருமெனக் கூற வந்தால் கூப்பிடுகிறேன் என்பார்..

அவரது கடைக்கு
அன்று வரும் அழைப்புகள்
அனைத்தும் எனற்கோயென
அவளது நினைவுகளுடன்
என்மனம் படபடக்கும்..

எனக்கு அப்படியென்றால்
என்னவளும் அப்படித்தானே
ஏங்கிருப்பாள்
என்னிடம் பேசுவதற்கு..

அவள் இருந்தது
மூணாரில் இருந்து
1 மணிநேரப் பயணத்தில்
நயமக்காடு எஸ்டேட்..
தொலைப்பேசியோ கைப்பேசியோ இல்லாதக் காலமது
தொலைத்தொடர்பில் தொடர்பு கொள்ள
மூணாறே வர வேண்டும்
ஞாயறு விடுமுறை யென்பதால்

வாரம் தவறாது
அவளின் தொலைப்பேசி அழைப்பு
ஞாயறென்றால் அவளிடம் பேசாது
தொண்டையில் இறங்காது காலை உணவு

சில சினுங்களும் சில அழுகையுமாக
சில கொஞ்சலுமாக சில கோபமுமாக
சிலநிமிட தொலைப் பேசி உரையாடலில்
சிகரத்தை தொட்ட
சிறகில்லா பறவையாகவே உணர்வேன்

அவளுக்கு பிடித்த தமிழ் சொல் மாமா
எனக்கு பிடித்த சொல் கவிதா தான்..(எனக்கு 2001யில்)

இத்தனைப் பாசமா ..?

இருக்காத என்ன..!

எங்கள் கிழவிகள்
எங்கள் சிறுவயதிலே
உனக்கு அவன்
எனக்கு அவளென்று சொல்லியே வளர்த்த
எனக்கும் அவளுக்குமான காதல்..அல்லவா !

இப்படி இருந்தவர்கள்
எப்படி பிரிந்திர்
அவ்வினாவுக்கு
இருவரிடமும்
விடையில்லை..

இறைவனிடமும் விடையில்லை

எச்சில் இலைக்கு திரிந்த
பொறுக்கி நாயொன்று
ஜோதிடக் கிளிக்கு விரித்த வலையில்
என்னுயிர் கூண்டுக் கிளி சிக்கியது

என் தலைவிதி மாறியது..
மாறிய தலைவிதியைத் திருத்தியே வாழ்கிறேன்..இன்று

திருந்தாத கூண்டுக் கிளி தமிழ் சமூகத்தின் அவலக் கிளியின் அடையாளமே..

ஈஸ்வரனின் விளையாட்டுகள் தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (18-Apr-24, 12:19 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே