உச்சக்கட்டம்
இடமளித்திருக்கக் கூடாது
சந்தேகத்திற்கு இடமளித்தாய்!
சரி, போகட்டும்;
திணித்திருக்கக் கூடாது
கருத்தியல்களை திணித்தாய்!
சரி, போகட்டும்;
கொட்டியிருக்கக்கூடாது
கருந்தேளாய் கொட்டினாய்!
சரி, போகட்டும்;
தவிர்த்திருக்கக் கூடாது
சமரசங்களை தவிர்த்தாய்!
சரி, போகட்டும்;
நீண்ட பிரிவுக்குப் பின்
நீயாக வலியுறுத்தியதன் பேரில்
நிகழ்ந்தது நம் சந்திப்பு;.
அப்பொழுதும்
முன்னிலைப்படுத்தப்பட்ட
ஒருதலைப்பட்சத்தை...
சரி போகட்டும்
என்று விட இருக்கவில்லை
மிச்ச மீதி என்னிடம்!