விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 பாகம் 9
விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 : பாகம் : 9
++++++++++++++++++++++++++++++
லக்னம் ஆறாம் அதிபதி. அல்லது எட்டாம் அதிபதி சாரத்தில் இருந்தமையால்
முன் கோபம்
முந்தியபடியே வந்திட
மதுக்கடைக்கு இது ஆகாதென
பக்கத்து ஊர் உறவுக்கார மாமா
பெயரும் சாமி எனக்கும் சாமிதான்
பக்குவமா எடுத்து உரைத்தார்
எப்படித் தெரியுமா....?
முன் கோபம் மதுக்கடைக்கும் ஆகாது
மருத்துவத்துறைக்கும் ஆகாது மாப்பிள்ளை..
குடிகாரன்கிட்ட கோபப்பட்ட அவன் குடியோடு - நம்ம
குடியும் கெட்டு விடும்
குடிகாரன் 50 ரூபாவை கொடுத்து
கொடுத்தேன் 500 என்றிடுவான்.
பணத்தை வாங்கியதும்
பணப்பெட்டியில் போடாது..
கை விரல் நடுவில் வைத்திருந்து
குடிகாரனுக்கு சில்லறை கொடுத்தனுப்பி
போன பின்பே பணத்தை கல்லாவில்
போடனுமுனு அறிவுரை சொல்லிடவே
அன்று முதல் இன்று வரை
இரண்டையும் கடைப்பிடிக்க
இதுவரையில்லை தகராறு
இனியும் தொடரும் வரலாறு...
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்