கைகவிரலில் இருக்கிறது கட்சிகளின் தலையெழுத்து

கைகவிரலில் இருக்கிறது
கட்சிகளின் தலையெழுத்து /
கையெழுத்தை போடுபவனின்
கையில் இருக்கிறது /2

நல்ல திட்டத்தால்
நாட்டின் வளர்ச்சி /
நல்லவர்களை தேர்ந்தெடுப்பது
நமதின் பொறுப்புணர்ச்சி /4

உடுத்தும் உடையை
உடுத்திப் பார்த்து /
உற்று நோக்கி
உரசிக் கசக்கி /6

காலம் கடத்தி
காசைக் குறைத்து/
கம்புபை இலவசத்துடன்
கவணமுடன் வாங்குகிறோம் /8

நாட்டை ஆள
நல்லவர்களை தேர்ந்தெடுக்கையில் /
நொடிப்பொழுதும் சிந்திக்காது
நடிகனுக்கு வாக்களிக்கிறோம் /10

ஐந்தாண்டு கொள்ளையடிக்க
ஐநூறு கொடுக்கிறான்/
ஐந்தாண்டு அந்நூரில்
ஐசுவரியம் பெருகுமா?/12

ஐயா அம்மாவென்று
ஐந்தடி குனிந்தவுடன் /
ஐந்தறிவு மிருகமாக
ஐக்கியமாகி அடிமையாகிறோம் /14

சாதிப்பவனை விரட்டுகிறோம்
சாதிக்காரனை ஆதரிக்கிறோம்/
சரசரவென்று முன்னேறி
சந்ததிக்கு சேர்த்திடுவான் /16

வாக்களித்த வாக்களார்
வயலோரம் பசியோடு /
வெயிலோடு உறவாடி
வடகமாக சுருங்கிடுவான்/18

விலையில்லா பொருள்கொடுத்து
விலையற்ற உன்வாக்கை/
வசீகரிக்க வலையிடுவான்
வஞ்சீரமாக சிக்கிவிட்டால் /20

குள்ளநரிக் கூட்டாம்
கோட்டைக்குச் சென்றுவிடும் /
கோரிக்கை முன்வைத்தால்
கல்லாவை கவுத்தியே /22

காசுயில்லையென்று இரண்டு
கைகளை விரித்தே /
மைவைக்கும் மக்களை
ஏமாற்றாதீர் தலைவர்களே /24

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (18-Apr-24, 12:21 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 56

மேலே