வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஏழ்மைக்கு முழுமையாக
கல்வியும் கிடைத்தே/
கல்லாமை இல்லாமை
நிலமையடைய வேண்டும்/
வையக மாந்தர்க்கு
வயிற்றுப் பசிபோக்கும்/
விவசாயம் அழிவின்றி
புத்துயிர் பெறவேண்டும் /
பெண்மையை நசுக்கும்
ஆண்மையை வெறுப்போம் /
மேடு பள்ளமின்றி
சமத்துவம் படைப்போம் /
இருப்பதைக் கொடுப்போம்
நேசங்களைக் காப்போம்/
வறுமையில்லா வளமான
பாரதம் அமைப்போம் /
இலவசம் மறுப்போம்
மக்களாட்சிப் படைப்போம் /
நல்லவையாவும் விளைந்திட
வல்லமையும் தாராயோ /
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்