கொன்றாய் கொன்றாயெற் குழைந்து
கொன்றாய் கொன்றாயெற் குழைந்து
××××××××××××××××××××××××××××÷×÷÷×××
தனிமை வண்ணங்கள் ஐந்தும் வானில் /
தனித்துவமாக ஒன்றன கூடி வானவில்லாக/
வளைந்து அழகான ஓவியமாக காட்சிகளை/
வரைந்து கடல்நீரை தன்வசம் கொண்டு/
கருமையான கருமுகிலாகி நாற்றிசையும் மழையாக /
கருணையுடன் பொழிந்து இடி இடித்து/
கொண்டாடி மகிழும் நீலநிற வானம் /
காதலர் இல்லாத தனிமையில் தவிப்பவளை /
கொல்வது பொதாதென்று மழையில் நனைந்த/
கொன்றை மரமே தழைத்து செழித்து/
என்னைக் கொல்வதற்கு என்றே நீயும்/
இனிமையாக பூத்து மலர் சொரிகின்றாயோ!
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்