தந்தையின் தோளே குழந்தைக்கு பல்லக்கு
ஏழையாப் பிறப்பதிலும்
இன்பம் உண்டடா/
ஏன் எனக் கேளடா சின்ன./
மகனே நீயும் சற்று நின்று /
புனித யாத்திரைக்கு
குதுகலமாய் போகையிலும் /
குத்தால அருவியில்
குளித்திட செல்கையிலும்/
கற்றிட பள்ளிக்கூடம்
சென்றிடும் வேளையிலும்/
அன்னையின் சுமையில்
பங்கெடுப்பான் தகப்பனடா/
எங்கும் எப்போதும் உனைத் தாங்கி/
பிஞ்சிப் பாதம் மிஞ்சி நடக்கையிலே/
தந்தையின் தோளே குழந்தைக்கு பல்லக்கெடா/