பலன்பெறவே

பலன்பெறவே...!
08 / 06 / 2024

அழுகையில் தொடங்கி
அழுகையில் முடியும்
அல்பமானிட வாழ்க்கையிது
தொழுகையில் தொடங்கி
தொழுகையில் முடியும்
தொடர்ந்திடும் துன்ப மர்மமிது
பழுத்த கனியின் மேல்தினமும்
விழுந்த அடியின் அனுபவங்கள்
எழுத்தில் வடித்திட முடியாது
வாழ்ந்து வாழ்வினில் உணரணும்
வாழ்க்கைப் பாடத்தை படித்திட
வாழ்வின் பாதையில் அடிச்சுவட்டை
ஆழப் பதித்தே விடைபெறனும்
அடுத்த தலைமுறையினர் பலன்பெறவே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-Jun-24, 5:31 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

மேலே