பரட்டையும் சுருட்டையும்

பரட்டை: உங்க அப்பா உக்கார்ந்துண்டே சாப்பிட்டாருன்னு சொல்லுறியே, இன்னா வேலை பார்த்தார்?
சுருட்டை: நாப்பது வருஷமா ஹோட்டல்ல கல்லா பெட்டியில் உக்கார்ந்து வேலை பார்த்தார்.
***
பரட்டை: நீ மேலே கீழே பறந்து பறந்து வேலை பார்க்கிறேன்னு சொல்லுறியே, இன்னாப்பா தொழில் செய்யுறே?
சுருட்டை: முப்பது மாடி கட்டடத்தில் லிப்ட் ஆபரேட்டர் ஆக.
***
பரட்டை: மச்சான், எழுநாளும் வேலை பாக்கிறேன்னு சொல்லுறே. அப்படி இன்னாதான் வேலைப்பா உனுக்கு?
சுருட்டை: ஆறுநாள் எங்கள் ஆபிஸ் கேன்டீன்ல சமைக்கிறேன். ஞாயிற்று கிழமைகளில் வீட்டிலே சமைக்கிறேன்.
***
பரட்டை: நைனா, இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிப்பா அருமையான கார் வாங்கிட்ட? நேத்து பாத்தப்போ சும்மா ஷோக்கா ஒரு புது வண்டியை ஓட்டிகினு போனியே?
சுருட்டை: அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. இப்போ நான் கார் மெக்கானிக்கா வேலை பார்க்கிறேன்.
***
பரட்டை: காதலில் தோல்வின்னு சொன்னியே. இன்னிக்கு ரொம்ப குஷியாக கீறியே? இன்னா ஆச்சு?
சுருட்டை: என்னுடைய காதலிக்கு, இன்னொரு ஆளுகூடவும் காதல் தோல்வி ஆயிடிச்சு.
***
பரட்டை: உன் வீட்டிற்கு வந்து உன்னை பார்க்கணும்னு வந்தா, வீடு பூட்டிக்கிறது. ஆனால் நீ மட்டும் உள்ளே கீறியே? இது என்னப்பா கூத்து?
சுருட்டை: நான் வேலையில்லாமல் சும்மா இருக்கேன்னுட்டு என் பொண்டாட்டி, வீட்டு வேலை எல்லாத்தையும் நானே செய்யணும்னு, அவ வேலைக்கு போகசொல்ல என்னை வீட்டில வச்சு பூட்டிட்டு பூட்றா.
பரட்டை: ரெண்டாவது சாவி இருக்குமே. அதை கொடு. நான் திறந்து விடுறேன்.
சுருட்டை: இருந்தா நானே வெளியே வந்து திறந்துடுவேனே மச்சான். அவ் போட்டுகிற பூட்டு, நம்பர் லாக். அந்த நம்பர் என்னன்னு அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

பரட்டை: அப்போ, ஊட்டுலேயே உக்காந்துக்கோ.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Jun-24, 9:47 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 21

மேலே