ஆயுர்வேத பைத்தியம்

நோயாளி: ஆயுர்வேத ஆயில் எடுத்தா என்னுடைய ஆயுள் கூடுமா?
மருத்துவர்: அது தெரியாது. ஆனால் ஆயுர்வேத மருந்தின் ஆயுள் நிச்சயமாக கூடும்.
நோயாளி: ஓஹோ. சரி, என் மூளை பிரச்சினைக்கான மருந்தை எப்படி எடுத்துக் கொள்ளணும்?
மருத்துவர்: மூளை உபத்திரவத்திற்கு, உங்கள் வீட்டின் மூலையில் அமர்ந்து இந்த ஆயிலை 27 நிமிடங்கள் தலையில் தேய்க்கவும்.
நோயாளி: அப்படி பண்ணா, மூளை குழம்பி போயிடாதா?
மருத்துவர்: ஏற்கனவே நீங்கள் மூளை குழம்பி போய்தான் இருக்கீங்க. இந்த எண்ணெயை தேச்சா, கொஞ்சம் குழப்பம் குறையும்.
நோயாளி: புரிந்தது டாக்டர். என் கால் உபத்திரவத்திற்கு?
மருத்துவர்: இந்த பாட்டிலில் உள்ள கால் பாகம் மருந்தை கால் மேல் கால் போட்டுக்கொண்டு குடிக்கணும்.
அதற்கு பிறகு கால் கீழே காலை போட்டுக் கொண்டு, கைமேல் கையை போட்டுக்கணும்.
நோயாளி: அப்படி பண்ணா என்ன ஆகும்?
மருத்துவர்: கால்வாசி பலன் கைமேல் கிடைக்கும்.
நோயாளி: ஆஹா. ரொம்ப மகிழ்ச்சி டாக்டர். இந்த இடுப்பு வலிக்கு எப்படி?
மருத்துவர்: ரொம்ப சுலபமான முறை. இடுப்பு அளவுக்கு 30.3 செல்சியஸ் டிகிரீ தண்ணீரில் நின்று கொண்டு, இந்த மாத்திரையை அரை மணி நேரம் மெதுவாக சப்பி முழுங்கணும்.
நோயாளி: அப்படீன்னா, என்னுடைய கழுத்து வலிக்கு, கழுத்து வரை தண்ணீரில் நின்று கொண்டு இன்னொரு மாத்திரையை முக்கால் மணி நேரம் சப்பி முழுங்கணும். சரிதானே டாக்டர்?
மருத்துவர்: அப்படி இல்லை. இந்த மருந்தை எடுப்பதும் மிகவும் சுலபம். ராகு காலம் வேளையில், தண்ணீர் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்று, யாரையாவது உங்களை கழுத்தை பிடித்து தள்ளி விடச் சொல்லணும். நீங்கள் தண்ணீரில் மொத்தமாக முழுகிக் கொண்டு, இந்த அரை கிலோ சூரணத்தை நீச்சல் குளத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
நோயாளி: அப்படி செய்யும் போது ஒருவேளை நானே தண்ணீரில் மூழ்கி விட்டால்?
மருத்துவர்: குடி ஒண்ணும் முழுகிப் போயிடாது.
நோயாளி: ???

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-24, 10:05 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 38

மேலே