ஏன் உன்னை காதலிக்கிறேன்

நிலவில் தோன்றும் பிறை நிலவு
உந்தன் சிரிப்பு!!,

நான் பார்க்கவேக் கூடாதென்று
நினைக்கும் அழகு உந்தன் அழுகை!!,

அவ்வப்போது நிலவிலிருந்துக்கூட
வெப்ப அலைகள் வீசும் உந்தன் கோபம்!!,

சிட்டெரும்பைக்கூட சீரட்டும் உந்தன் கருணை!!,

தீண்டாமை ஒழித்து என்னை இறுகப்பற்றிக் கொள்ள வைக்கும் உந்தன் அச்சம்!!,

விழிகள் பொங்க, புருவங்கள் பறக்க வியப்பே வியக்கும் உந்தன் வியப்பு!!,

வேலுநாச்சியாரின் மறுஉருவம் உந்தன் வீரம்!!,

ஒருசில சிலுமிஷங்களுக்கு 'ச்ச்சீ' எனும் உந்தன் அருவருப்பு!!,

ஓர் ஆயிரம் கவிப்பாடும் உந்தன் மெளனம்!!,

இவையாவும் போதாத நான் உன்னை காதலிக்க!!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (24-Jul-24, 10:50 pm)
பார்வை : 236

மேலே