கலைந்தாடும் கூந்தலில் காற்றுக்கு போதை

கலைந்தாடும் கூந்தலில் காற்றுக்கு போதை
மலையாக ஓங்கியே மண்ணில்நின் றுந்தன்
சிலையாக மாற தவம்செய் யுதுபார்
விலையிலா என்னிந்த வெண்பா உனக்கே
கலையெழிலே கண்ணெழில் காட்டு

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-24, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே