நின்று ரசிப்பதேனோ நீ

தென்றல் இளம்காற்று தேன்தமிழ் பாட்டிசைத்து
குன்றினுச்சி தன்னில் குழல்முடித் தாடிவந்து
அன்றலர்ந்த பூத்தழுவி அன்பினில் முத்தமிட
நின்று ரசிப்பதேனோ நீ ?

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-24, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே