சுதந்திர தினம்

சுதந்திர தினம்

வெள்ளையன் நம் மண்ணில் நம்மை அடிமையாக்கி
வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்டு மக்கள்
வெள்ளையனின் வரம்புமீறிய ஆதிக்கத்தை ஒழித்த பின்
சந்திகளில் எல்லாம் சுதந்திரம் பாடலாகி ஒலித்திட
சத்தமின்றி ரத்தமின்றி வாங்கிய சரித்திரத்தைக் கூறிட
மூவர்ண கொடிகள் எங்கும் கம்பீரமாகப் பறந்திட
மூவேந்தர் ஆண்ட நாட்டில் மக்கள் ஆட்சி மலர்ந்திட
மூவர்ணகொடி இதனை முப்படை தலைவர்கள் காத்திட
மூத்த தலைவர்கள் அணியாக மரியாதையைச் செலுத்திட
நமது நாடு நம்முடையது எனப் பெருமை நடைபோட்டு
நாம் எல்லோரும் சமம் என்று உரைத்து மிகத் துணிவோடு
நம் சந்ததியர் அனைவரும் மனம் மகிழும் வகையில்
மனித உரிமைகள் அனைத்திற்கும் விடிவு காலாக
மகிழ்ச்சி வெள்ளம் எங்கும் பெருகி வழிந்திட
மறையாத புகழ் பெற்ற நம் பாரத நாட்டின்
மூவர்ண கொடி இதை ஏற்றி வைத்து இந்நாளில்
சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (10-Aug-24, 5:54 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : suthanthira thinam
பார்வை : 57

மேலே