நித்திரையைத் தொலைத்தேன் நான்

முத்தமிழ்ப் பாடலை மூங்கில்கள் பாடிடும்
பத்தரை மாத்துச்செம் பொன்னொத்த உன்னெழிலை
சித்திரம் தீட்டிட காத்திருக்கும் தூரிகைகள்
புத்தகம் எல்லாம் புகழ்ப்பா டிடதுடிக்கும்
நித்திரை யைத்தொலைத்தேன் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-24, 4:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே