நன்மதி வெண்பா - நூல் - பாடல் 53
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
வாளுரகத் திற்கு வலியதலை யிற்கடுவாம்
தேளிற்கு வாலில்விடஞ் சேருமே - கோளர்களாம்
தீயுருவார் கீழ்கட்குத் தேகமெலாம் வெங்காளம்
ஏயுமென நன்மதியே யெண்! 53