குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - பாடல் 66

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

இதுவுமது

பாங்கன் தலைவனோடழுங்கல்.

எவ்விடத் தெவ்வியற் றென்றல்.

அவனஃ திவ்விடத்திவ்வியற் றென்றல்.

பாங்கன் இறைவனைத் தேற்றல்.

குறிவயிற் சேறல்.

இறைவியைக்காண்டல்.

இகழ்ந்ததற்கு இரங்கல்.

தலைவனை வியத்தல்.

தலைவியை வியத்தல்.

தலைவன்றனக்குத் தலைவி நிலை கூறல்.

தலைவன் சேறல்.

தலைவியைக் காண்டல்.

கலவியின் மகிழ்தல்.

புகழ்தல்.

பாங்கியொடு வருகெனப் பகர்தல்.

(இ-ள்) இனிநீ யுன்னுயிர்ப் பாங்கியுடனே வருவாயென்று தலைவிக்குத் தலைவன் கூறுதல்.

கட்டளைக் கலித்துறை

கோங்கார் முகிண்முலை யாய்மெய்யு நீழலுங் கூர்பொருளும்
பாங்கா முரையும் பிரிவதுண் டோபண் டிராவணனை
யாங்காரந் தீர்த்த குலோத்துங்க சோழ னளகைவெற்பி
னீங்காநின் காதலி தன்னுடன் வாவினி நீவரிலே! 66

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (13-Aug-24, 9:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே