பூமிக்கு ஆகாயத்தின் மீது எரிச்சல்
பூமிக்கு ஆகாயத்தின் மீது எரிச்சல்
பூமிக்கு
ஆகாயத்தின் மீது
எரிச்சல்
இயற்கை தனக்கு
எதிராய்
சதி செய்து
விட்டதோ?
தன் உடம்புக்குள்
இத்தனை
உயிர்களை படைத்து
எப்படியோ
அவரவர்கள்
வாழ்ந்து கொள்ளுங்கள்
என்று விட்டு விட்டு
நாளும் இந்த
உயிர்களிடம்
தான்
மட்டும் அவதி பட்டு
கொண்டிருக்க
அதை விட
முக்கால் பாகம்
நீரையும் வயிற்றில்
வைத்த படியே
நிலை நிற்க
இத்தனையும்
சுமந்து
சுழன்று கொண்டிருக்க
ஆகாயம் மட்டும்
வெற்று பலூனாய்
ஆனாலும் அரசாய்
சூரியன், நிலவு, காற்று,
மழை, புயல்
இராணுவத்தை கையில்
வைத்து கொண்டு
நினைத்தபடி
ஆட்டுவித்து கொண்டிருக்கிறது
தங்களை