வெயில் ஒரு மயில்
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
*வெயில் ஒரு மயில்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
#வெயில்
காலை வெயில்
கவிதையானது.....
மாலை வெயில்
மருந்தானது.....
மதிய வெயில்
ஆரோக்கியமானது....
அளவோடு இருந்தால்
காதலி....
அளவுக்கு மீறினால்
மனைவி....
வெயில்
வித்தியாசமான
கற்றுக்கொடுக்கும்
களைப்பையும் கொடுத்து
அதை நீக்குவதற்கு
நிழலையும் கொடுக்கும்....
உடல் தேசத்தில்
வைரஸ்
பாக்டீரியா தீவிரவாதிகளை
எதிர்த்து
போரிட்டுக் காக்கும்
ராணுவ வீரன்....
அப்பாவை போல்
பார்ப்பதற்கு
வில்லனாகத் தோன்றினாலும்
உண்மையில்
கதாநாயகன் தான்....
வெப்பத்தின்
பிறப்பிடம்.....
வெளிச்சத்தின் இருப்பிடம்...
தாவரங்கள்
பட்டினி கிடந்த சாகாமல்
சமைக்க தானியம் கொடுக்கும்
உழவன்.....
விழுந்த
வித்துக்களை
கைக்கொடுத்து
தூக்கிவிடும் தோழன்...
நிழனின் அருமையை
விளக்கிச் சொல்லும்
பேராசிரியர்.....
வெயில்
கதிர்த்தோகை
விரித்தாடும் மயில்....
*கவிதை ரசிகன்*
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄