உதட்டில் உறவு உள்ளத்தில் பகை

நன்னீர் பொய்கையிலே
நஞ்சிதனை கலப்பதுபோல்

நயமுடனே பேசி வார்த்தைகளில்
நர்த்தனங்கள் ஆடிடுவார்!



நம்பி நாம் உறவு கொண்டால்
"நம்பி" நம்பிக்கைத்துரோகமும் செய்வாரே!

நிழல் போலலே தொடர்ந்து வந்து
நித்தமும் நிறம் மாறும் பச்சோந்தி!

உள்ளமெல்லாம் கள்ளம் வைத்து
உதட்டில் மட்டும் வெல்லம் வைப்பாரே!

உத்தம நண்பனைப்போல் வேடமிட்டு
ஊர்குடியும் தினம் கெடுப்பாரே!!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை
உயர்நோக்கம் கொண்டவர்தாம் ஒருநாளும் நாடாரே!

"உதட்டில் உறவு உள்ளத்தில் பகை"என்பாரும் உள்ளாரே
உணர்ந்தே வள்ளல் பிரணாரும் (இராமலிங்க அடிகளார்) சொன்னாரே!!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (29-Aug-24, 7:05 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 52

மேலே