ஆற்றிலே போட்டாலும் அளந்தே போடு

ஆற்றிலே போட்டாலும்
அளந்து தான்
போட வேண்டும் - என்றார்

எதை கொண்டு அளப்பது
என்பதில் தான்
எண்ணற்ற முரண்கள் இங்கு

பத்து லட்சம் கோடீஸ்வரன்
ஐந்தாயிரம் கோடி
திருமண செலவிட்டால்

பகட்டென்று பட்டயம்
கட்டிய நாம்
வாழ்நாள் சேமிப்பையே
வாரிசுக்கு தந்தால்
தவறில்லை என்றோம்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (29-Aug-24, 10:56 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 48

மேலே