போதனைகள் மறைவதில்லை

அரசனின் பேர் சொல்ல ஒரு செங்கோல்
அகல் விளக்காயினும் தேவை ஒரு தூண்டுகோல்
அகிலும் தழைத்தோங்க
ஆசிரியர் மட்டுமே தருவார் தன் தோள்.

போதித்தவன் மறைந்தாலும்
போதனைகள் என்றும் மறைவதில்லை.

கண்ணனின் போதனை கீதையானது
காந்தியின் போதனை சத்திய சோதனையானது.

அக்னி சிறகு கொண்டு பறந்தது
அப்துல் கலாமின் போதனை.


கட்டி தந்த உணவு
கெட்டுவிடும் ஒரு பொழுது

கற்றுக்கொண்ட போதனை
ஒரு நாள் கெடாது.

கற்றுக்கொடுப்பது மட்டுமே அறப்பணி .
கற்றலில் மட்டுமே மறையும்
கல்லாமை என்னும் பிணி (நோய்).

அறம் செய்ய விரும்பு என்று
அவ்வை சொன்னதும் போதனையே!

ஆசையை துற என்று
ஆணையிட்டதும் புத்தனின் போதனையே!

அகிம்சை கொள் என்ற
அண்ணல் மகாத்மாவின்
வாழ்வும் போதனையே!

அச்சம் தவிர் என்ற
ஆண்மை கவி
பாரதியின் வரியும் போதனையே!

போதனைகளை போற்றுவோம்
சாதனைகளை ஏற்றுவோம்.

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (3-Sep-24, 9:01 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 56

மேலே