முடி

மலை முகடு என்பதும் முடி
மங்கையின் கூந்தல் என்பதும் முடி

மட்டைத் தேங்காய் கொண்டதும் முடி
மான் உயிர்நீக்கும் மானமும் முடி

மன்னவனின் மகுடம் என்பதும் முடி
மனதின் ஆசையதை எண்ணியே முடி

மலைசபரி செல்வோருக்கும் இரு முடி
மங்காத கவிதமிழுக்கு இல்லையே முடி

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (6-Sep-24, 10:18 am)
சேர்த்தது : TPRakshitha
Tanglish : mudi
பார்வை : 18

மேலே