இட்லி முதல் சேவை வரை
இட்லிக்கு சட்டினி
ஏகாதசிக்கு பட்டினி!
அடைக்கு வெல்லம்
கடைக்குட்டிக்கு செல்லம்!
பொங்கலுக்கு கொத்சு
ஜலதோஷத்திற்கு விக்சு!
பூரிக்கு உருளைக்கிழங்கு
மோர்க்குழம்புக்கு சேப்பங்கிழங்கு!
புரோட்டாவுக்கு குருமா
இல்லைன்னா நிறைவைத் தருமா?
சூடா சாப்பிட்டால்தான் பஜ்ஜி
இல்லன்னா வாயில போடு பிச்சி!
மிளகு போட்ட சூடான போண்டா
சாப்பிடாம யாரு சுகத்தை கண்டா?
முந்திரி பருப்பு போட்டு செய்த ரவா உப்புமா
கொஞ்சம் நெய் விடாமல் இருந்தா ருசிக்குமா?
பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடு ஆப்பம்
உன் பின்னால் தன்னால ஓடியாரும் தூக்கம்!
தேங்காய் எலுமிச்சம் தக்காளி இப்படி பல சேவை
வயிறு நிறைவாக இருக்க வேறென்ன தேவை?
ஜாய்ராம் டிபன் சென்டர்