இன்று உலக சுற்றுலா தினம்

இது குறித்து, சில உலகத் தலைவர்களின் கருத்துக்கள்:
அமெரிக்கா ஜனாதிபதி:
அமெரிக்காவை சுத்திப்பார்க்க வரும் பலர், திரும்பிபோகாமல் இங்கேயே தங்கி எங்க உயிரை எடுக்கிறாங்க.

இங்கிலாந்து பிரதம மந்திரி:
எங்க நாட்டுக்கு சுத்திப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிலர்,
எங்க காதில கொஞ்சம் பூவையும் சுத்திட்டு போறாங்க.

பிரெஞ்சு அதிபர்:
எங்க நாட்டுல எவ்வளவோ சுத்திப்பாக்க இடங்கள் இருக்கு. ஆனால், இந்த சுற்றுலாப்பயணிகள் பலர், ஈபில் டவருக்கு மேலே ஏறிக்கொண்டு கீழே வரமாட்டேங்கறாங்க. இதனால எனக்கு தலையே சுத்துது.

ஜெர்மனி அதிபர்:
ஹிட்டலரைத் தவிர, எவ்வளவோ அருமையான இடங்கள், விஷயங்கள் எங்க நாட்டுல இருக்கிறது. ஆனாலும், பல வெளிநாட்டவர்கள் பிராங்கபார்ட் ஏர்போர்ட்டிலிருந்து அமெரிக்காவுக்கு நழுவிச் சென்றுவிடுகிறார்கள்.

இஸ்ரேல் அதிபர்:
எங்களுக்கு நிம்மதியான பாடு. சுற்றுலா பயணிகள் எவருமே இங்கு வருவதில்லை. இங்கே வந்தால் மீண்டும் உயிரோடு அவங்க நாட்டுக்கு திரும்பமுடியுமா என்ற பயம்தான் என்று கேள்விப்பட்டேன்.

ரஷ்ஷிய அதிபர்:
இங்கே சுத்தி பார்க்க வரவங்களில், சிலரை எங்க ராணுவத்தில் வளைத்து போட்டு, உக்ரைன் பக்கம் அனுப்பிவிடுகிறோம். இதனால் பயந்து போய் பலர், எங்க நாட்டு பக்கமே தலைவைத்துப் படுக்கிறதில்லை. இது ரொம்பவும் வியப்பாக இருக்கிறது.

உக்ரைன் அதிபர்:
ஏற்கெனவே நாங்கள் போரில் ஈடுபட்டிருப்பதால், சுற்றுலா வரவங்களை, எங்களுக்கு கொஞ்சம் சமையல் வேலைக்கு உதவி பண்ணச் சொல்றோம்.
சாப்பாடும் தரோம் என்று வாக்குறுதி அளித்தாலும், ஒரு பயல் இப்போதெல்லாம் இங்கே வருவதில்லை.

இந்திய பிரதமர்:
உலகத்தில இன்னும் ரெண்டு இடங்கள்தான் நான் பார்க்காதது. ஒண்ணு அண்டார்டிக்கா, இன்னொண்ணு ஆப்ரிக்காவில் உகாண்டா. இதையும் நான் சுத்திப்பார்த்து வந்துவிட்டு, சுற்றுலா துறைக்கு ஜீஎஸ்டி வரிவிலக்கு கொடுத்துவிடுவேன். அப்புறம் பாருங்க, ஒவ்வொரு நாட்டுக்காரனும் வாரியடிச்சிண்டு நம் நாட்டுக்கு வருவான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Sep-24, 1:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

சிறந்த நகைச்சுவைகள்

மேலே