பையன் இன்னும் வரலியா
ஏம்மா மணி எட்டு ஆகுது கல்லூரில இருந்து இன்னும் பையன்
வரலியா?
@@@@@@@
அவன் தினமும் எட்டரை மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றான். நீ
வழக்கமா வேலையை முடிச்சு ஒம்பது மணிக்கு வீட்டுக்கு வருவ.
இனிக்கு எட்டு மணிக்கே வந்துட்ட. உம் பையன் செய்யற
வேலைய்யெல்லாம் உனக்குத் தெரியாது. நான் உங்கிட்ட
சொன்னா உடனே கோவப்பட்டு நேரங்காலம் பாக்கம அவனை
அடிச்சு தொவச்சு எடுத்துருவ. நான் அப்பவே சொன்னேன்
"பையனுக்கு அந்தப் பேரை வைக்காதடா சுனேசு"னு சொன்னேன்.நீ
எங்க எம் பேச்சைக் கேட்ட?
@@@@@@@@@
பையன் பேருக்கு என்னம்மா கொறச்சல். 'கம்பீர்' அருமையான
இந்திப் பேராச்சே!
@@@@@@@@@@
அந்தப் பேருனால தான் நீ தினம் வீட்டுக்கு வர்ற நேரத்தைத்
தெரிஞ்சிட்டு தள்ளாடிட்டு எட்டு மணிக்கு வர்றான். அவன் அம்மா
அவனுக்குப் புத்தி சொல்லிச் சொல்லி ஓஞ்சு போயிட்டா?
@@@@@@@@@@
மட்டையாட்டம் ஆடி களைச்சுப் போயி தள்ளாடிட்டு வர்றாணா?
@@@@@@@@@@
இல்லாடா சுனேசு. காலைல அவன் கல்லூரிக்கு பொறப்படற போது
அவங்கூடப் படிக்கிற திலக்குங்கிற பையன் வந்து வலது கையின்
எல்லா விரலையும் மடக்கிட்டு கட்டை விரலை நீட்டி வாய்க்கு
நேராக் கொண்டு போயிட்டே "கம் பீரு"னு சாடை காட்டறான்.
அவன் பணக்காரப் பையனாம். மோட்டார் சைக்கிள்ல வந்து
அவன் இவனைக் கல்லூரிக்குக் கூட்டிட்டு போறான், அவனுக
போனதுக்கு அப்பறம் உன் மனவி மந்தனாகிட்ட 'கம்'னா என்னனு
கேட்டான். அவள் சொன்னாள் "'கம்'ந்னா 'வா'னு அர்த்தம்
அத்தை'னு" சொன்னா. பீருக்கு அர்த்தம் எனக்குத் தெரியும்.
செய்தில குடிகாரங்க பீரு குடிக்கிறதை அடிக்கடி
பாத்திருக்கிறேனெ. டேய் சுனேசு நீ உம் பையனுக்கு கம்பீருனு
பேரு வச்சு அவனை குடிகாரன் ஆக்கிடட.
@@@@@@@@@
என்னம்மா செய்யறது அவன் பெயர் இராசி இது மாதிரி ஆகும்னு
தெரியாம போச்சே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Name Kambir generally means 'One brave god'. is Masculine (or Boy) name. A person with this name is mainly Sikh by religion.