தளதளென வளர்ந்துவிட்ட தாரகையே நீவாழி - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 பொழிப்பு மோனை)

தளதளென வளர்ந்துவிட்ட
..தாரகையே நீவாழி;
பளபளப்புத் தோன்றுகின்ற
..பல்வரிசை காட்டுகிறாய்!
மளமளென நடந்துவந்தால்
..மாலையிட நான்வருவேன்;
விளங்குகின்ற வேந்தனெனை
..விரும்பிநீயும் வருகுவையோ?

– வ.க.கன்னியப்பன்

முதல்சீர் நான்கடிகளிலும் ஒரே வகை காய்ச்சீர் அமைந்தால் ஓசை சிறக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-24, 7:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே