கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 3 பா 11 12 13 14 15
கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 3 பா 11 12 13 14 15
11.
சங்கம் தவிர்த்தநல் யோகியர்கள் எல்லோரும்
தங்களின் ஆத்மசுத்திக் காக வெறும்தம்
மனதுபுத்தி யாலுடலால் ஐம்புலன் தன்னால்
திமமும் வினையாற்று வார்
12 .
யோகி வினைப்பயனில் பற்றற் றவனாகி
யோகநிட்டை யில்மனச் சாந்தியை எய்துவான்
கர்மயோகம் செய்யாதான் ஆசை வயத்தினால்
கர்மபல னில்பற்றை வைத்துக்கர் மம்செய்வான்
கர்மபந்தப் பட்டிருப் பான்
13 .
தன்னைப் பிணைக்கும் கருமம் அனைத்தையும்
தன்நல் லறிவால் துறந்திடு வான்தேகி
ஒன்றுமே செய்யாமல் செய்விக்கா மல்தனது
ஒன்பது வாயிலுடை ஊரினிலே என்றுமே
இன்புற்று வாழ்ந்திருப் பான்
14 .
கருமத் தலைமையை உண்டுபண்ண வில்லை
கருமத்தை யும்கருமத் தின்பலன்தன் னையும்
கருமம் கருமபல னில்சேர்ப்ப தையும்
அருமை உயர்பரம் தான்செய்ய வில்லை
பிருகர்தி தன்னியல் பாம்
15 .
பரமெவன் புண்யபாவத் தையும்ஏற் காது
பரஞானம் அக்ஞானத் தால்மூடப் பட்டு
நரசீவன் மோகத் திலே