ஸ்ரீச்சி

அண்ணே நாம் நம் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை


வெளிலியிடப் போறோம். நாம் ஆட்சிக்கு வர்றது உறுதி. நாம் மகத்தான வெற்ற்றிபெற நம் தேர்தல் அறிக்கையே போதும். பிரச்சாரம்கூடத் தேவையில்லை. நம்ம


தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அளிக்க உள்ளோம்.


அதில்



முக்கியமானது எது? நீங்கள் முதல்வர் ஆனதும் எந்தத் திட்டத்திற்கு



முதல் கையெழுத்துப் போடுவீங்க?


@@@@@@@@@@@@@@@



நம்ம கட்சிக்கு, பெயர்ச் சொல்லுக்கு முன்னால் போடும் 'திரு' என்ற


இரண்டு எழுத்துக்கள் பிடிக்காது. நான் முதல்வர் ஆனதும்


என்னுடய முதல் கையெழுத்து அந்த 'திரு'வைத் தூக்கிட்டு 'திரு'

பொடற எடத்தில் எல்லாம் 'ஸ்ரீ'யைப் போடணும். இந்த மாற்றத்தை

ஏற்காத நிறுவனங்கள் அல்லது தனிநபர் மீது கடுமயான

நடவடிக்கை எடுக்கப்படும்.

@@@@@@@@@@@@@@@@@


;அப்ப இந்தச் சட்டத்தின்படி திருச்சி ஸ்ரீச்சி ஆகும். திருக்குறள்


ஸ்ரீகுறள் ஆகும். திருச்சிற்றம்பலம் ஸ்ரீசிற்றம்பலம் ஆகும். திருமூலர்

ஸ்ரீமூலர் ஆவார்.



அண்ணே தமிழர்களில் 95 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள்

அவர்கள் பிள்ளைகளுக்கு பிறமொழிப் பெயர்களைப்

வைப்பாவர்களாக

இருந்தாலும் தமிழுக்கு எதிரானது எதுவாக இருந்தாலும் தமிழர்கள்

கொதிச்சுப் போயிடுவாங்க. நம்ம கட்சிக்கு ஒரு வாக்குக்கூடக்

கிடைக்காது. தமிழில உள்ள பக்தி இலக்கியங்களில் அதிக

அளவில்

'திரு' பயன்[படுத்தப்பட்டிருக்குது. நம்ம தேர்தல் அறிக்கையை

வெளியிட்ட பின்னர் வாக்கு கேட்கப் போனா மக்கள் நம்மள

அவுங்க ஊர்களுக்குள் நுழையவிடமாட்டாங்க. இந்த தேர்தல்

அறிக்க்கைய மாற்றி தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு,

தமிழர் நாகரிகம், தமிழர் வரலாறு ஆகியவற்றைப் போற்றிப்

பாதுகாப்போம்னு பொய்யான வக்குறுதிகளைக் கொடுத்தால்

ஒவ்வொரு தொகுதிக்கும் கட்டின முன்பணம் (டெபாசிட்) ஆவது

சில தொகுதிகளில் கிடைக்கும்.


@@@@@@@@@@@@

ஆமாண்டா தம்பி நீ சொல்ல்றதுதான் சரி. நாம தயாரிச்ச தேர்தல்

அறிக்கையைத் தீயிட்டுக் கொளுத்திட்டு புதுசா ஒன்னு

தயாரிக்கணும். தேர்தல் அறிக்கை முழுவதும் மக்களை ஏமாற்றும்

ஏராளமான பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஒரு அஞ்சு ஆறு

தொகுதிகளிலாவது ஜெய்ச்சாகணும்.

எழுதியவர் : மலர் (17-Oct-24, 9:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

சிறந்த நகைச்சுவைகள்

மேலே