பிள்ளையை எப்படி வளர்த்தாய் சொல்

பொத்திப் பொத்தி வளர்த்தப் பிள்ளை இவன்
என்று சொல்லிப் பின் இவன் இப்படி
இன்று தன போக்கிலே போகும்
தாந்தோனியாய் அலைகின்றானே என்று
அழாத குறையாய் அல்லல் படுகிறாய்
பொத்தி வளர்க்கும் பொது பிள்ளைக்கு
நல்லது தீயது யாவை நல்லோர் சேர்க்கை யாது
என்று நித்தம் நித்தம் ஓதி வளர்த்திடாது போனாயோ
நல்ல வளர்ப்பே நல்லோரைத் தந்திடும்
நாம் வாழ நம்மை இனிதே வாழ்விக்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Oct-24, 4:39 pm)
பார்வை : 21

மேலே