காலமே கொஞ்சம் பின்னே என்னை அழைத்து செல்வாயா
காலமே என்னைக் கொஞ்சம் பின்னே
செல்ல வழி வகுப்பாயா ?
ஆம் அந்த இந்தியாவின் 'பொற்காலத்திற்கு;
அந்த திருடர், திரட்டு பயம் ஏதும் இல்லாது
மக்கள் வாழ்ந்த காலத்திற்கு ,
வீட்டில் கதவுகள் இருந்தும் பூட்டு
ஏதும் இல்லாது மக்கள் வாழ்ந்த காலத்திற்கு
பிறரை ஏமாற்றி பிழைக்காது தன்
உழைப்பின் மேன்மையில் வாழ்ந்த காலத்திற்கு
மன்னனை நம்பி குடிமக்கள் வாழ்ந்த காலத்திற்கு
மக்களை நம்பி வாழ்ந்த மாமன்னர் காலத்திற்கு
உண்மை தலைத்தூக்கி அரசாண்ட அக்காலத்திற்கு
காலமே கொஞ்சம் என்னை அங்கு அழைத்துச்சென்று
அந்த பொற்காலத்தை அனுபவிக்க
வழி செய்வாயா.....